தெஹிவளை ஓபன் சைட் வீதிக்கு முன்பாக உள்ள கடற்கரையில் குறைந்தது 8 அடி நீளம் கொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை ஒன்று இன்று (12) காணப்பட்டதாக ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காலை 08.15 மணியளவில் கடற்கரையில் முதலை காணப்பட்டு கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, ராட்சத முதலை கடற்கரையில் தெருநாய்களை வேட்டையாடுவதாக அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்கள் கூறுகின்றன.
கடலுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த மீனவர்கள், கரையில் முதலையைக் கண்டதையடுத்து, கடற்கரையை தவிர்த்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் நபர் ஒருவரை முதலை தாக்கியதைத் தொடர்ந்து, குறித்த கடற்பரப்பு டைவிங் மற்றும் கடல் நீச்சலுக்கு ஆபத்தானதாகக் கருதப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.