2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.