குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் போலி வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு இன்று (14) நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி, 5,000 ரூபா அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே உத்தரவிட்டார்.