இலங்கையின் பொருளாதார நிபுணர் அமல் எரான் ஹேரத் சந்தரத்ன உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரொஸ்மீட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து நேற்று மதியம் (23) தவறி விழுந்தே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 வயதான அமல் சந்தரத்ன நுண் பொருளாதார நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.