வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் புல்மோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பெண்ணொருவரினால் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.