குளியலறையில் பெண்ணை வீடியோ எடுத்த அமைச்சர் ஒருவரின் வீட்டுக் காலவரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குளியலறையில் பெண்ணை வீடியோ எடுத்த அமைச்சர் ஒருவரின் வீட்டுக் காலவரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது!


வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த  அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டுக் காவலர் என பொலிஸார் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


முக்கிய பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தராக இணைக்கப்பட்டிருந்த  பொலிஸ் உத்தியோகத்தர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவரும் நிலையில், அருகில் உள்ள காணிக்குள் இரகசியமாக பிரவேசித்து, அக் காணியில் உள்ள வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரின் கையடக்கத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.