கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை குறைகிறது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை குறைகிறது!


கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய 10 வீதத்தால் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.


தற்போது கொத்து ரொட்டியானது 500 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.


அத்துடன் ப்ரைட் ரைஸ் 350 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.


அதேநேரம் சாதம் 250 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.


எவ்வாறாயினும் பசும்பால் மற்றும் பால்மா கலவையுடனான தேநீர் மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.