வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடியாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்கள் வாட்ஸ்அப்பில் மற்ற பயனர்களுக்கு மெசேஜ் அல்லது சாட் செய்ய அவர்களது எண்ணை தங்கள் போனில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர்களை வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். இப்போது எண்களை சேமிக்காமல் நேரடியாக சாட் செய்ய முடியும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு படிப்படியாக பயன்பாட்டுக்கு கிடைக்கும் என வாட்ஸ்அப் மெசஞ்சர் மேம்பாடுகளை நுணுக்கமாக கவனித்து வரும் WABetaInfo தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் செயலியை அப்டேட் செய்வதன் மூலமாகவும் இதனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?
- பயனர்கள் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்ய வேண்டும்
- நியூ சாட் பட்டனை ஓபன் செய்ய வேண்டும்
- அதில் சேர்ச் ஆப்ஷனில் (லென்ஸ் வடிவில் உள்ள பட்டன்) பயனர்கள் தாங்கள் சாட் செய்ய விரும்பும் எண்ணை உள்ளிட வேண்டும்
- அதை செய்த பின்னர் அந்த எண்ணுக்கு பக்கத்தில் சாட் என ஆப்ஷன் வரும். அதன் மூலம் அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.