க.பொ.த உயர்த்தர மாணவர்களின் பாடசாலைக்கான வருகை வீதத்தினை 40 சதவீதமாக கருத்தில்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் இன்றைய தினம் (20) விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனை தெரிவித்தார்.
கல்விப் பொதுத்தராதர உயர்த்தர மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் 80 சதவீதமாக காணப்படுவது அவசியமாகும்.
எனினும் இந்த வருடத்திற்கு மாத்திரம் பாடசாலைக்கான வருகையை 40 சதவீதமாக கருதுமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.