கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்றைய முன்தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறப்படும் நிறுவனத்தை கொழும்பில் நடத்திவந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதி அவரின் நிறுவனத்தில் பணி புரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு சந்தேக நபரான கோடீஸ்வர வர்த்தகர் இந்த யுவதிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோடீஸ்வர தொழிலதிபரின் அழைப்பின் பேரில் குறித்த யுவதியும் அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
சந்தேக நபர் ஹோட்டலில் சந்திப்பு மண்டபத்தை முன்பதிவு செய்திருந்ததாகவும், அந்த யுவதி மண்டபத்துக்குச் சென்றபோது கதவு மூடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.