இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல டிப்போக்களைச் சேர்ந்த பேருந்துகளின் ஊழியர்கள் தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிராக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பத்தானை, பொலன்னறுவை, கெபித்திகொல்லேவ மற்றும் கந்தளாய் ஆகிய பஸ் டிப்போக்களுக்கு உட்பட்ட ஊழியர்களினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
ஹொரவ்பத்தனை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ பரிசோதகரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிப்போ இன்ஸ்பெக்டர் தனியார் பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக வேலைக்குச் செல்லவும், அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும் முயலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.