நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பௌத்த பிக்கு ஒருவர், தான் படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 81 வயதுடைய தேரர் ஆவார்.
உயிரிழந்தவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பௌத்த துறவியானார்.
சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த பௌத்த துறவி இவ்வாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.