கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க அடுத்த சில வாரங்களில் அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓரளவு துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.