நட்டத்தில் ஓடும் ட்விட்டர் நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நட்டத்தில் ஓடும் ட்விட்டர் நிறுவனம்!


ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார்.


முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


பின்னர் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டனர்.


ட்விட்டரில் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன.


இதனால் விளம்பரதாரர்கள் வழங்கும் விளம்பரங்கள் படிபடியாக குறைந்தது.


முன்னதாக மஸ்க் , ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். நிறுவனம் இலாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் கூறியிருந்தார்.


அதன் பின், விளம்பரத்துறையில் அனுபவமுள்ள லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.


இருப்பினும், ஒரு நாளில் இத்தனை ட்விட்டுகளை மட்டும் தான் பயனாளர்கள் பார்க்க முடியும் என ட்விட்டரில் சில கட்டுப்பாடுகளை விதித்தது பயனாளர்களை வருத்தமடையச்செய்தது.


தற்போது ட்விட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்ததால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.


வணிக ஆலோசனையை வழங்கும் ட்விட்டுக்கான பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.


அதேபோல் ட்விட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது.


வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக ட்விட்டரை இலாபப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் எனக்கூறியுள்ளார்.


இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.