எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் தெரிவித்தார்.
அதன்படி, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது
கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கு அமையவே லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் குறித்த எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.