இன்று (06) நள்ளிரவுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணைக்குழுவின் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15 ஆம் திகதி இணையவழி மூலம் மட்டுமே தொடங்கியது .
இன்று நள்ளிரவுடன் முடிவடையும் காலக்கெடு எந்த சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டது என பரீட்சைகள் ஆணைக்குழு தலைவர் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் ஜூன் 15 ஆம் திகதி அறிவித்திருந்தது.