மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்பான காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தக பக்கத்தில் நேற்று (02) இரவு பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வெளியானவுடன் ஜப்பானில் வசிக்கும் சிங்கள இளைஞர்கள் சிலரால் மாகல்கந்தே சுதந்த தேரர் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர், அவர் ஜப்பானிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.