வெளிநாட்டு தொழிலை எதிர்பார்த்திருப்போரின் தகுதி மற்றும் தொழில் வாய்ப்புக்களை ஒன்றுடன் ஒன்றை தொடர்புபடுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரை அமைப்பு திட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலுக்காக செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் தொழிலாளர்களின் தகுதிகள் மற்றும் வேலை வாய்ப்புகளுடன் தொடர்புபட்ட விடயங்களை ஒன்றுடன் ஒன்றை தொடர்புபடுத்தும் இணைய வழி அடிப்படையிலான திட்டம் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஆசியா - பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ஆகியோரினால் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்காட்சியின் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு ஆகியன இணைந்து இந்த இணைய வழி அடிப்படையிலான திட்டத்தை தயாரித்துள்ளன.
இத்திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்துள்ள தொழிலாளர்களின் தகுதிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு தேவையான தகுதிகளுடன் தொடர்புபடுத்தி, தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யாத வேலை தேடுபவர்களை தொழிற்கல்விக்கு நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வெளி நாடுகளில் அதிக தொழிலாளர் தேவை உள்ள இருபது துறைகள் ஆரம்ப கட்டத்தில் இதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரம், முதற்கட்டமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு தேவையான தகுதிகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன.
எம்.மனோசித்ரா