இலங்கையில் தங்கத்தின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையில் ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 302 ரூபாவாகவும் விற்பனை விலை 317 ரூபாவாகவும் பதிவானதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு இந்த நாட்டில் தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதன்படி, 22 காரட் தங்கம் 3,000 ரூபாவால் 150,800 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒரு பவுன் 24 காரட் தங்கம் ரூ.163,000 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)