பல பிரச்சினைகளை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்துப் பொருட்கள் நாளை (13) இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்தி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் உயிரிழந்ததை அடுத்து சுகாதார அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)