கொழும்பு கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், அதே ஹோட்டலின் ஊழியரான இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.
அஜய் குமார் என்ற 28 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு உணவகத்தில் சந்தேக நபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.