சிசேரியன் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மார்கெயின் (Marcaine Spinal Heavy) என்ற மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை வைத்தியசாலையின் சிசேரியன் சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள மார்கெய்ன் மருந்தினை தெரிவு செய்யப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை என தகவல்வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள மருந்து இரண்டு நாட்களிற்கே போதுமானது என்பதனால் அதனை அவசர சிகிச்சைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தவகை மருந்துகள் உள்ள வைத்தியசாலைகளிற்கு நோயாளிகளை மாற்றவும் வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட வகை மருந்து தனியார்துறையினரிடமும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை வைத்தியசாலை நிர்வாகம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.