பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 09 பேரும் ஒரே திகதியில் பிறந்த நாள் கொண்டாடுகின்றமை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த அமீர் அலி - குதேஜா என்ற தம்பதிக்கு 07 குழந்தைகள் உள்ளனர்.
தாய் தந்தை போலவே, குழந்தைகள் 07 பேரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி பிறந்துள்ளனர்.
இத்தம்பதிக்கு 1991இல் அதே திகதியில் தான் திருமணமும் நடைப்பெற்றுள்ளது.
குறித்த தம்பதிக்கு 19 முதல் 30 வயது வரையுள்ள 07 குழந்தைகள் உள்ளனர்.
07 பிள்ளைகளில் 04 பேர், இரட்டையர்கள். அதாவது ஒரு பிரசவத்தின் போது இரட்டை ஆண் குழந்தைகளையும், இன்னொரு பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர்.
இதன்படி, 7 குழந்தைகளும் ஒரே திகதியில் பிறந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அதேபோன்று குடும்பத் தலைவருக்கும், குடும்பத் தலைவிக்கும் அதேநாளில் பிறந்ததினம் வருவது கூடுதல் அம்சமாகும்.
அமீர் அலி, குதேஜா தம்பதிக்கு, கடந்த 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக 1952 மற்றும் 1966ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த கம்மின்ஸ் குடும்பத்தின் ஐந்து குழந்தைகள் இந்தச் சாதனை பிரிவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருந்தனர்.
தற்போது கம்மின்ஸ் குடும்பத்தின் சாதனை முறியடிக்கப்பட்டு, அமீர் அலி குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இதுகுறித்து அமீர் அலி கூறுகையில், “இது எல்லாம் இயற்கையாகவே நடந்தது. கடவுள் கொடுத்த பரிசு. எங்கள் குழந்தைகள் ஒரே நாளில் பிறக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திட்டமிடவில்லை” என்று கூறியுள்ளார்.