எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி, நிதியமைச்சு மற்றும் அமைச்சரவை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என அமைச்சர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய நிலவரப்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் 61 நிரப்பு நிலையங்களில் ஆட்டோ டீசல் குறைந்த பட்ச இருப்பான 50% இனை பராமரிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் மக்களுக்கு தேவையான போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதால், குறைந்தபட்ச எரிபொருள் இருப்புகளை முறையாக பராமரிக்க தேவையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.