சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியின் பின்னர் செலவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால்மா கிலோ ஒன்றுக்காக 100 ரூபா சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுதல் இந்த வரி விதிப்பு அமுலானது.
ஒரு கிலோ கிராம் பால்மாவிற்கான வட் வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரியாக 200 ரூபா அறவிடப்படுகிறது.
இந்த புதிய சுங்க வரி விதிப்பின் மூலம் பால்மாவுக்காக 300 ரூபா வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடதக்கது.