அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது அதே பாடசாலை மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (26) பாடசாலை நிறைவடைந்து ஆசிரியர் வீடு சென்ற சந்தர்ப்பத்தில் அந்த பாடசாலையில் உயர் தரத்தில் கற்கும் இரண்டு மாணவர்களும், அவர்களது உறவினர்களும் இணைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, ஆசிரியரின் உந்துருளி மற்றும் அவரது உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலை ஆசிரியர்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.