சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அதற்கமைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் என்றார்.
மேலும் கட்டுமானத்துறைக்குப் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் குறிப்பிட்டளவுக்கு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.