விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் பர்வீஸ் மஹரூப் ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் மஹரூப், தனது சர்வதேச வர்ணனை பணி மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக குழுவில் தனது பங்களிப்பை வழங்க முடியவில்லை என்று விளையாட்டு அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மஹரூப் கடந்த ஏப்ரல் 2023 இல் தொழில்நுட்பக் குழுவிற்கு நியமிக்கப்பட்டார். இந்த குழு இலங்கை கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் பணியை கொண்டுள்ளது.
இந்த குழுவின் மற்ற உறுப்பினர்களில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான சனத் ஜெயசூரிய, சரித் சேனாநாயக்க மற்றும் அசந்த டி மெல் ஆகியோர் அடங்குவர்.