கொழும்பு கறுவாத் தோட்டப்பகுதியிலுள்ள ஆடையகம் ஒன்றிலிருந்து 2017 ஆம் ஆண்டு, ரூ 40,000 பெறுமதியுள்ள காற்சட்டைகளை திருடிய இளைஞன் ஒருவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு வருடங்களாக சாட்சிகளின்றி விவாதிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (10) முடிவுக்குக் கொண்டுவந்தது.
கொழும்பு 08 ஐச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த ஆடையகத்திலிருந்து, ரூ.19,900 பெறுமதியுள்ள இரண்டு காற்சட்டைகளைத் திருடியுள்ளார்.
ஆரம்பத்தில், சிசிடிவி காணொளிகளைப் பரிசோதித்ததன் அடிப்படையில் குறித்த சந்தேக நபரைக் கறுவாத் தோட்டப் பொலிஸார் கைது செய்த போதும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுமார் 6 வருடங்களாக இந்த வழக்கை விவாதித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்றைய தினம் சந்தேக நபருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.