ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வரித் திருத்தத்தின் மூலம் அனைத்து வகையான மதுபானங்களினதும் 750 மில்லிலீற்றர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயினால் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பியர் போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.