வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் சிறந்த முறையில் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகச் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின், முதல் ஆறு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் மூலம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.