வடமேற்கு பாகிஸ்தானில் பாஜூர் - கர் பகுதியில் நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 19 பேர், படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 100க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைகளுக்காக பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பிரும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.