தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (15) 4 மாத குழந்தைக்கு பண்டுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்றட்டுள்ளதுடன், உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னரும் குறித்த குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.
பின்னர் அந்த குழந்தையை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவரின் பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், குறித்த குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த குழந்தையின் சடலம் தற்போது, குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இன்று இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர், குறித்த குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தாக்கம் உள்ளதாக என்பது தொடர்பில், அறிந்துக்கொள்ள முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.