கண்டி - தெல்தெனிய, கோனவல பகுதியில் 3,000 அடி உயர மலை உச்சியிலிருந்து 13 வயது சிறுவன் ஒருவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திகன ரஜவெல்ல கல்கெடியாஹனேவைச் சேர்ந்த இசுரு வீரரத்ன என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிறுவனின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.