இன்று (20) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.