லிட்ரோ சமையல் எரிவாயு விலையை மேலும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 3,000 ரூபாவுக்கு குறைந்த அளவில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைதிருத்தம் தொடர்பில் நாளைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.