நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுமியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த இளம்பெண் காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
OIC நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் – 0718 591 630
நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் – 0312 222 227