சொந்த மகள் பாலியல் துஷ்பிரயோகம்; கொடூர தந்தைக்கு 17 வருட கடூழிய சிறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொந்த மகள் பாலியல் துஷ்பிரயோகம்; கொடூர தந்தைக்கு 17 வருட கடூழிய சிறை!


கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து  வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது தந்தையான 78 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக இனம்காணப்பட்டு நேற்று (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது


கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதுடைய மகளை அடித்து  துன்புறுத்தியும், பூவரசம் தடியினால் தாங்கியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்றும் சிறுமியின் வாக்கு மூலம், சாட்சியங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த முதியவரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.


இதன்போது எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றவாளியானவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தமையினை  கவனத்தில் எடுத்த மன்று குறித்த குற்றவாளிக்கு சிறைச்சாலையில் வைத்திய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.


இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.