ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்ட 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கையே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.