ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் 7 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தனகல்ல பொலிஸார் கூறினர்.
முதற்கட்ட விசாரணையில் நீதிபதி வீட்டில் இல்லை என்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்ததும் தெரிய வந்துள்ளது.
பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் அலுமாரிக்குள் சிறிய பெட்டகத்திலிருந்து தங்க நகைகள், பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையில் அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையில் இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.