நிலவும் பொருளாதார நெருக்கடி மத்தியில் பௌத்த மதகுரு ஒருவரிடம் இருந்து 100 வீத ஒழுக்கம் எதிர்பார்க்க முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிலவும் பொருளாதார நெருக்கடி மத்தியில் பௌத்த மதகுரு ஒருவரிடம் இருந்து 100 வீத ஒழுக்கம் எதிர்பார்க்க முடியாது!


தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளில், பௌத்த மதகுரு ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை. ஆகவே இந்த நாட்டின் பௌத்தமதத்துறவிகளும் மக்களும் சரியான பாதையை பின்பற்றுமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம் என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.


பௌத்தமதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை.


அதேவேளை தற்போதைய சமூக நிலைமையின் கீழ் பௌத்த மதத்துறவிகளிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க இயலாது.


அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை நன்கு திட்டமிடப்பட்டவை. சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்த மதத்துறவிகளின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் குறைப்பதற்காகவே இவை அரங்கேற்றப்படுகின்றன.


அரச சார்பற்ற அமைப்புகள் சில இதனை முன்னெடுப்பதுடன் அதற்கான பெருமளவு நிதி  புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பெறப்படுகிறது.


கடந்த சில தினங்களாக நாங்கள் தகவல் தொழில்நுட்ப துறையினருடன் இது குறித்து கலந்துரையாடினோம். அதனடிப்படையில்  இந் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.


இவ்வாறான திட்டமிட்டு நடாத்தப்படும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து நாங்கள் வெட்கமடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.