இந்நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 சம தவணைகளாக செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.