யூடியூப் டுடோரியல்களின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளை உள்நாட்டில் தயாரித்த இருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவலின்படி, சந்தேகநபர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
T-56 துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாவை சுடக்கூடிய ஆயுதம், ஐந்து அடி நீள துப்பாக்கி, T-56 துப்பாக்கி தோட்டா ஒன்று, இரண்டு கிரைண்டர்கள் மற்றும் ஆயுதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மற்ற பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆயுதங்கள் குற்றச் செயல்களுக்காக தயாரிக்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 41 மற்றும் 21 வயதுடைய பதுரெலிய, சீலதோல பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள்.
சந்தேகநபர்களை மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ : https://web.facebook.com/watch/?extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=297034662745159