2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயின் புலவாயோவில் அணி தங்கியுள்ள ஹோட்டலில் செக்-இன் செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான பின்வரும் விளக்கங்களைச் சமர்ப்பிக்க இலங்கை கிரிக்கெட் விரும்புகிறது.
இலங்கை அணியினர் நேற்று (11) நண்பகல் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர், பின்னர் உள்ளே நுழைய முட்படும் போது, இலங்கை அணிக்கு சற்று முன்னதாக வந்த மற்றொரு தேசிய கிரிக்கெட் அணி, "செக்-இன்' செய்யும் பணியில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் சில இலங்கை தேசிய அணி வீரர்கள் "செக்-இன்" செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், SLC, இந்த விடயத்தை ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து, குறுகிய காலத்திற்குள் சிக்கலை சரிசெய்ய முடிந்தது. (யாழ் நியூஸ்)