அண்மையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்று ஆழ் கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை அமெரிக்க கடலோர பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவின் தென்பகுதியில் டைட்டன் நீர்மூழ்கிப் கப்பலின் பாகங்கள் சில கண்டுபிடிக்கபிடிக்கப்பட்டுள்ளது.
அவை தற்போது கனடாவின் துறைமுகம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடலடியில் சுமார் 3,800 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட தேடல் பணிகளில் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அவை இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.