இலங்கை பாடசாலைகளின் கல்விப் பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (22) அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சீர்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் பாடசாலைகளில் 6ம் வகுப்பு முதல் ஜப்பானிய மொழியை பாடமாக இணைப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மேலும் பாராளுமன்றத்தில் விளக்கினார். (யாழ் நியூஸ்)