இன்று (21) கொட்டாவ, பிலியந்தல வீதியிலுள்ள மருத்துவ ஆய்வு கூடத்திற்குள் பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மருத்துவ ஆய்வகத்துக்குள் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் மருத்துவ ஆய்வு கூடத்திற்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மருத்துவ ஆய்வகத்தின் ஊழியரான இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)