இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் சரிந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 294 ஆகவும் விற்பனை விலை ரூ. 309 ஆகவும் பதிவாகியுள்ளது.
டொலரின் நேற்றைய கொள்வனவு விலை ரூ. 290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.