விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை!


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது.


இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​விமல் வீரவன்ச இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.


இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு

 ஒத்திவைக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.