கொஸ்லாந்தை - உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மே 11 ஆம் திகதி பிற்பகல், கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு இந்த இளம் தம்பதியினர் சென்று இரவு முகாமிட்டுள்ளனர்.
அதன்போது, இரவு வேளையில் குறித்த இருவர் மீது காட்டு யானை தாக்கியதில், யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலங்கள் காரணமாக கொஸ்லந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.